
ஐரோப்பியர்களின் முத்த வகைகளும் முறைகளும் அதன் கருத்துக்களும்
காதல் முத்தம்: முத்தமிடுபவர் தனது இதழால் (சொண்டு) அன்பாக மிருதுவாக முத்தமிடுதல். முத்தமிடும் பகுதிகள் கழுத்து, நெஞ்சு, காது என்பன. இதன் கருத்து நான் உன்னை விரும்புகின்றேன்.
நட்பு முத்தம்: முத்தமிடுபவர் தனது மூடிய இதழால் உலர்வாகவோ, ஈரமாகவோ முத்தமிடுதல். முத்தமிடும் பகுதிகள் இயல்பான உடம்பு பகுதிகள். இதன் கருத்து உன்னோடு நல்ல நட்பு.
தாய்மை முத்தம்: முத்தமிடுபவர் மூடிய இதழால் உலர்ந்த அன்பான முத்தமிடுதல். முத்தமிடும் பகுதிகள் கன்னம், நெற்றி, தலை என்பன. இதன் கருத்து நான் உனக்காகவே வாழ்கிறேன்.
தொழில் முறை முத்தம்: மூடிய இதழால் உலர்ந்த ஈரமான முத்தமிடுதல். முத்தமிடும் பகுதிகள் புறங்கை அல்லது கன்னம். இதன் கருத்து, நான் உங்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்புமாய் இருப்பேன்.
சடங்கு அல்லது மரபு பழக்க முத்தம்: முத்தமிடுபவர் மூடிய இதழ்களால் உலர்ந்த அன்பான முத்தமிடுதல். முத்தமிடுபவர் முத்தமிடும் பகுதிகளும் பொருட்களும், இடங்களும். ஆடை ஆபரணங்கள், போர்க்களம், விளையாட்டு மைதானம், புதிய நிலப்பகுதிகள், எதிராளி அல்லது உயர் மதிப்புக்குரியவர்களின் கை, கால், நெற்றி என்பன. இதன் கருத்து மரியாதை செலுத்துகிறேன்.
மற்றும் சில முத்தங்கள் 'காதலா.கொம்" குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு 'போஸ்ற் காட்" எழுதிப்போட்டாலும் சொல்ல மாட்டேன். உங்களுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் போலிருக்கிறது.
கற்கி-

