Kathala.com Chat

இப்படியும் முத்தமிடலாமே...

தித்திப்பது முத்தம் என்பதை சொல்லியா தரவேண்டும்? ‘கிஸ்’ அடிப்பதென்றால் அந்தச் சந்தப்பபத்தை ‘மிஸ்’பண்ணி விடக்கூடாது என்று எல்லலோருமே ஜாக்கிரதையாக இருப்பதுண்டு.

இந்த ‘கிஸ்’ விடயத்தில் நடிகர் கமலஹாஸன் படு கில்லாடி. தன்னுடன் நடிக்க வரும் நடிகைகளை. படத்திற்குப் படம் கிளுகிளுப்பூட்டும் வகையில், வித்தியாசமாக முத்தமிடுவதில் வீராதி வீரன் இவர். முத்தமிடும் கலையில், பாண்டித்தியம் பெற்றவர் என்றுகூடச் சொல்லி விடலாம்.

என்றுமில்லாதவாறு, அழகுப் பெண்களின் தொப்புள்கள், மார்பகங்களை மிஞ்சி வருகின்றன. விம்மித் தணியும் மார்பகங்களைவிட, விரிந்த குவிந்த தொப்புள்களைக் காட்டுவதில், இன்றைய இளம் பெண்கள் போட்டிபோட்டுக்கொண்டு நிற்கிறார்கள். தொப்புளில் பம்பரம் சுழன்றது. ஓம்லெட் போட்டுப் பார்த்தார்கள். மண்ணை அள்ளிக் கொட்டினார்கள். இனித் தொபபுளில் தேநீர் ஊற்றிக் குடித்தாலும் குடிப்பார்கள். இதை முத்தமிட்டும் கிளுகிளுப்பூட்டி வருகின்றார்கள்.

இணையப் பரப்பை மேய்ந்ததில், இப்படியும் முத்தமிடலாமே என்று சொல்லும் வகையில், வித்தியாசமான பெயர்களில், வித்தியாசமாக முத்தமிடுவதுபற்றி அலசியிருக்கின்றார்கள். காதலிக்கு இதுவரையில், ஒரே மாதிரியே முத்தம் கொடுத்து அலுத்துப் போயிருப்பவர்கள் இனிவரும் காலங்களில், நாளொரு தழுவலும், பொழுதொரு முத்தமுமாக காதலை வளர்த்துக் கொள்ள இதோ சில பயனுள்ள குறிப்புகள்: வண்ணத்துப்பூச்சி முத்தம்: அன்புக் காதலி நெருங்கி விட்டாளா? மூச்சு முட்டும் தூரத்தில் அவளை வைத்துக் கொண்டு வண்ணத்துப் பூச்சி சிறகடிப்பதுபோல, கண்மடல்களை படபடவென்று திறந்து மூடுங்கள். ஒரு இனிய முத்தம் இங்கே பரிமாறப்பட்டு விட்டது.

எஸ்கிமோ முத்தம:; உறையவைக்கும் குளிரில், இதமாகச் சு10டான முத்தமொன்று கிடைப்பதில் யாருக்குத்தான் உடன்பாடு இல்லை? முகத்தைச் சற்று எட்ட வைத்துக்கொண்டு, காதலியின் மூக்கோடு உங்கள் மூக்கை உரசுங்கள். தீப்பொறி பறக்காவிடினும், காதல்பொறி பறப்பது நிச்சயம்.

கண்மடல் முத்தம்: தன் கண்களை மூடியபடி, இனிய கனவுகளில் திளைத்து, உங்கள் காதலி உறங்கும்போது உங்களுக்கு ஒரு முத்தம் கொடுக்கும் வாய்ப்பு தேடிவருகின்றது. ஆவளை நெருங்கி, மெல்லக் குனிந்து, கண்மடலில் முத்தமிடுங்கள். ஜாக்கிரதை. உணர்ச்சிவசப்பட்டு, முத்தமிடும் இடத்தை மாற்றி விடாதீர்கள். நித்திரை கலைந்து, வெறுப்போடு உங்களைக் காதலி விரட்டும் அவல நிலை வேண்டாம்.

நெற்றியில் முத்தம்: நாம் நல்ல நண்பர்கள் என்பதை இந்த முத்தம் வெளிப்படுத்தி விடுகின்றது. மெதுவாகக் குனிந்து, உறங்கும் காதலியின் இதழ்களில் உங்கள் இதழ் பதியுங்கள். அனுபவம் அற்புதமாக இருக்கும்.

புலி முத்தம்: இந்த முத்தத்தில் சிங்கம், புலி, யானைகளும் வருகின்றனவா என்று ஆச்சரியப்படுகின்றீர்களா? பதுங்கித் தாக்குவதில் புலியை எந்த மிருகமும் மிஞ்சி விடமுடியாது. புலி முத்தம் கொடுக்கத் தயாராகி விட்டீர்களா? ஓ.கே. புலி போல காதலிக்குப் பின்hல் பதுங்கி வாருங்கள். புலிப் பாய்ச்சல் இனி வேண்டாம். மெல்லக் காதலியின் கழுத்தைப் பிடித்து கடியுங்கள். புலி போல செல்லமாகச் சில உறுமல்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். காதலி சற்றே மிரண்டாலும் சுவையான சு10டான முத்தம் பரிமாறப்பட்டு விடுகின்றது.

விழிபபூட்டும் முத்தம்: தேவதை போல தூங்கிக் கொண்டிருக்கிறாள் உங்கள். காதலி. காலைப் பொழுதில் உணர்ச்சிகளைக் கிளற உங்களுக்கு நல்லதொரு சந்தர்ப்பம். விட்டுவிடலாமா? மெல்லக் குனிந்து, உங்கள் இதழ்களால், காதலியின் பூவிதழ்களை வருடிக் கொடுங்கள். எதற்கும் முன்ஜாக்கிரதையாக, முதல் நாள் இரவு நல்ல பற்பசை கொண்டு உறங்கச் செல்லும்படி காதலிக்குச் சொல்லிவைப்பது நல்லது.

தொப்புள் முத்தம்: உங்களுக்கு ஓணானுக்கு உள்ள நாக்கு போல, நீண்ட நாக்கு இருப்பது இந்த வகை முத்தத்திற்கு நல்லது. அதற்காக இல்லாத நீளத்திற்கு எங்கே போவது,? இருப்பதில் திருப்தி காணவேண்டியதுதான். காதலியின் தொப்புளைக் குறிவைத்து குனியுங்கள். நாக்கை நீட்டி, தொப்புளில் நிலைநிறுத்தி, இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக என்று மாற்றி மாற்றி துளாவிப் பாருங்கள். இருவரும் சொர்க்கலோகத்திற்கு பாதித்தூரம் பறந்திருப்பீர்கள். இன்னும் வரும்...

About Us

Advertise with us

Like Us On Facebook